Friday, May 27, 2011

நாடார்







தமிழ்நாட்டில் நாடார் என்ற சாதிப் பட்டம் கொண்ட சான்றோர் சமுதாயத்தினர் குறிப்பிடக்கூடிய எண்ணிக்கையில் உள்ளனர். திருநெல்வேலி, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் இவர்கள் பெரும்பான்மையினர். மேலும், மதுரை, தேனி,சேலம், கோவை, தஞ்சாவூர், ஆற்காடு, செங்கல்பட்டு, சென்னை போன்ற மாவட்டங்களிலும் இவர்கள் பல தொழில்களிலும் துறைகளிலும் ஈடுபட்டுள்ளனர். வட மாவட்டங்கள் மற்றும் புதுவையைப் பூர்விகமாகக் கொண்ட சான்றோர் சமுதாயத்தவர் கிராமணி என்ற பட்டம் கொள்வர். நாடார் சமுதாயத்தில் சுமார் 60% இந்துக்கள், எஞ்சியோர் கிறித்தவர்கள். ஆங்காங்கே ஒருசிலர் இஸ்லாம் சமயத்தைத் தழுவியதாகக் கூறப்படுகிறது. இந்து சமயத்தோடு பல விதங்களில் இணைந்திருந்தாலும் அதிலிருந்து சில கொள்கைகளில் மாறுபடுகின்ற அய்யாவழி சமயத்தைப் பின்பற்றுவோர் பெரும்பாலும் நாடார் சமூகத்தவரே.திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறித்துவ சமயத்தைப் பின்பற்றும் நாடார்கள் அதிகம் உள்ளனர்.

1 comment: